'உடலுறுப்பு தானம் என்பது உயிரின் பகுதியை தருவது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'உடலுறுப்பு தானம் என்பது உயிரின் பகுதியை தருவது'

Added : பிப் 12, 2019
Advertisement

சூலுார்:''உடலுறுப்பு தானம் என்பது உடலின் பகுதியை தருவதல்ல... உயிரின் பகுதியை தருவதாகும்,'' என, உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.சூலுார் ரத்னவேல் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லுாரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேசிய நாட்டு நலப்பணித்திட்ட குழு மற்றும் உடலுறுப்பு இடமாற்று ஆணையத்தோடு இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், வணிகவியல் உதவி பேராசிரியர் ஷாகிதா வரவேற்றார். துறைத்தலைவர் விவேகானந்தர் தலைமை வகித்தார்.சேலம் அரசு மருத்துவமனை உடலுறுப்பு இடமாற்று ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் பேசுகையில், ''நமது நாட்டில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஆனால், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, தயக்கம் காரணமாக, தேவைப்படும் அளவுக்கு குறைவாகவே கிடைக்கிறது. உடலுறுப்பு தானம் என்பது உடலின் ஒரு பகுதியை தருவதல்ல... உயிரின் ஒரு பகுதியை தருவதாகும்,'' என்றார்.தொடர்ந்து, மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X