'ஆதித்யா' மெட்ரிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆதித்யா' மெட்ரிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா

Added : பிப் 12, 2019
Advertisement

-கோவில்பாளையம்:சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம், ஆதித்யா பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.விழாவில், ஆதித்யா கல்வி குழு தலைவர் சுகுமாறன் தேசிய கொடி ஏற்றினார். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை சாமுவேல் பிரிதிவிராஜ் வாசித்தார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை, பள்ளி தாளாளர் பிரவீன் குமார், போலீஸ் எஸ்.ஐ., காசிபாண்டி ஆகியோர் ஏற்றனர். மாணவர்கள், நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடந்தன. மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சி, யோகா, கராத்தே, சிலம்பாட்டம் நடந்தன. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீநிதி, அறங்காவலர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X