நலத்திட்ட உதவி வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Added : பிப் 12, 2019
Advertisement

அனுப்பர்பாளையம்:திருப்பூர், பி.என்.,ரோடு அண்ணா நகர் தியாகி குமரன் காலனியில் புகழ் பெற்ற சுடலை மகாராஜா, முத்தாரம்மன், ஸ்ரீ ராஜகாளியம்மன், பேச்சியம்மன், கோவில் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறும் சித்தராக சுரேஷ் சுவாமி உள்ளார். இந்நிலையில், அவதார விழா, சர்வ சக்தி ஜன பேரவை சார்பில், கோவிலில் நடந்தது. மாவட்ட தலைவர் யுவராஜ், தலைமை வகித்தார், மாநகர தலைவர் சுரேஷ், முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் சதீஷ்பாபு வரவேற்றார்.விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நலத்திட்ட உதவியாக,ஆயிரம் பெண் பக்தர்களுக்கு சேலை, 500 குடும்பத்தினருக்கு, தலா 10 கிலோ கொண்ட அரிசி மூட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், மாநில துணை பொது செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் சிவக்குமார், மாநகர செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X