செயல் திட்ட வரைவு போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயல் திட்ட வரைவு போட்டி

Added : பிப் 12, 2019
Advertisement

பல்லடம்:மாநில அளவில் நடைபெறவுள்ள சிறப்பு செயல் திட்ட வரைவு போட்டியில், பூமலுார் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில், ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான. சிறப்பு செயல் திட்ட வரைவு போட்டி, நடந்தது. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், பல்லடம் ஒன்றியம், பூமலுார் அரசு பள்ளியை சேர்ந்த கார்த்திகா, மவுனகுரு, மதன் கார்த்திக், லாவண்யா, மற்றும் தேவ சரண்யா ஆகியோர் கொண்ட ஐவர் குழு, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இக்குழுவினர், ஆங்கில பாட பிரிவின் கீழ், 'போதை பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுதல், மற்றும் இடை நிற்றலை குறைப்பது' என்ற தலைப்பில், வரைவு திட்ட அறிக்கை தயாரித்திருந்தனர்.முன்னதாக, வட்டார அளவில் தேர்வாகி, மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ மாணவியரை, தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியர் செல்வகுமார் மற்றும் பலர், வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X