நிலக்கடலை வரத்து படுமந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை வரத்து படுமந்தம்

Added : பிப் 12, 2019
Advertisement

அவிநாசி:சீசன் குறைந்ததால், -சேவூர், நிலக்கடலை ஏலத்தில், 3.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்தது.அவிநாசி அருகே, சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கோபி, அந்தியூர், நம்பியூர் உட்பட பல இடங்களில் உள்ள விவசாயிகள், ஏல விற்பனைக்கு, நிலக்கடலை எடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், 187 மூட்டை வரத்தாக இருந்தது.குவின்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை 5,270 -5,410 ரூபாய், இரண்டாம் ரக நிலக்கடலை 5,100 - 5,260 ரூபாய், மூன்றாவது ரகம், 4,860 - 5,070 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 3.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. பல இடங்களில் இருந்து, 4 வியாபாரிகள், 13 விவசாயிகள் பங்கேற்றனர். 'நிலக்கடலை சீசன் முடிந்த நிலையில், வரத்து குறைந்துள்ளது' என, விற்பனைக்கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X