விருதுநகர்:விருதுநகரில் அதிநவீன பயோகெமிஸ்ட்ரி மற்றும் ஹார்மோன்கள் பரிசோதனை கருவிகள் 'கேர் ஏகேபிஎஸ்' மருத்துவமனையில் துவக்க விழா நடந்தது. பிரபல வணிகர் சங்கரபாண்டியன் முன்னிலையில் எம்.ஏ.பி. போல்ட்ஸ் அன்ட் நட்ஸ் நிறுவனர் சுமதி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீநிதி மெடிக்கல்ஸ் சக்தி பார்மா சுந்தரவேல் துவக்கி வைத்தனர்.இக் கருவி மூலம் ரத்தம் மட்டுமின்றி இதர உறுப்புகள் மூளை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதனை செய்யலாம். உடனுக்குடன் தைராய்டு மற்றும் ஹார்மோன்களின் அளவு கண்டறிவதுடன் இதய நோய் கண்டறியட்ரோபோனின் பி.என்.பி. என்ஜைம்கள் போன்ற சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும். துவக்க விழாவை முன்னிட்டு நடந்த இலவச தைராய்டு பரிசோதனை முகாமில் 200க்கு மேற்பட்டோர் பரிசோதனை செய்தனர். டாக்டர்கள் ரத்தினவேல், விவேக், நிகில் பங்கேற்றனர்.