ஜொலிக்குது 'தேவகோட்டை - திருப்பூர்' அரசு பஸ்! டிரைவர், நடத்துனருக்கு பாராட்டு குவியுது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜொலிக்குது 'தேவகோட்டை - திருப்பூர்' அரசு பஸ்! டிரைவர், நடத்துனருக்கு பாராட்டு குவியுது

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 ஜொலிக்குது 'தேவகோட்டை - திருப்பூர்' அரசு பஸ்!  டிரைவர், நடத்துனருக்கு பாராட்டு குவியுது

திருப்பூர்:அரசு பஸ்சை அழகுபடுத்தி, அனைவரையும் கவர்ந்துள்ள, டிரைவர் மற்றும் நடத்துனருக்கு, பயணிகள் தொடர்ந்து பாராட்டு தெரிவிக்கின்றனர்.தனியார் பஸ்களுக்கு நிகராக, அரசு பஸ்களை அழகாக பராமரிப்பதில், சில ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், தேவகோட்டை- திருப்பூர் அரசுபஸ் (டி.என். 63 என் 1782), தனித்துவமாக ஜொலிப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் பஸ் டிரைவர், நடத்துனர்கள் தான்.ஜொலிக்கும் விளக்குபஸ்சில் எல்.இ.டி., விளக்கு, டிவி, டிவிடி பிளேயர், ேஹாம் தியேட்டர், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளை செய்துள்ளனர்.இரவு நேரத்தில், வண்ண விளக்குகளை சிமிட்டி கொண்ட பஸ் வருவதை பார்த்தவுடன், பயணிகள் துள்ளிக்குதித்து பயணிக்கின்றனர்.மேலும், பஸ்சின் உட்புறம், ஜன்னல்களுக்கு திரைச்சீலை, கண்ணாடிகளில், கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சி, படிக்கட்டுகளில் 'லைட்' செட்டிங், பஸ் வெளிப்புறம் முழுவதும், ஸ்டிக்கர் ஒட்டி அழகூட்டியுள்ளனர்.நான்கு சக்கரங்களுக்கு, 'கிளாசிக்கல் வீல் கப்', அலங்கார விளக்குகள் என, அரசு பஸ்சா இது எண்ணும் வகையில், பளிச்சிட வைத்துள்ளனர்.இந்த பஸ் தினமும் காலை, 8:25 க்கு தேவகோட்டையில் புறப்பட்டு, மாலை, 4:30 மணிக்கு திருப்பூர் வருகிறது. இரவு, 11:00 மணிக்கு திருப்பூரில் புறப்படும் பஸ் மறுநாள் காலை, 5:00 மணிக்கு தேவகோட்டையை அடைகிறது.கடந்த, 2017ல், இதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட வேறொரு பஸ்சை, டிரைவர் முருகேசனின் முயற்சியால், அதன் ஊழியர்கள் இயன்ற அளவு பஸ்சை அழகுபடுத்தி, தமிழக அரசிடம் இருந்து, தலா, 5 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றனர். தற்போது, அதே முருகேசன் முயற்சியால், இந்த பஸ்சும் பளபளக்கிறது.பயணிகள் பாராட்டுபஸ்சில் பயணம் செய்யாவிட்டாலும் கூட, ஸ்டாண்ட்டுக்கு பஸ் வந்தவுடன், பயணிகள் கண்கள் தன்னிச்சையாக அந்த பஸ்சை மொய்க்கின்றன. அந்தளவுக்கு, தேவகோட்டை பஸ், பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், பஸ்சை அழகுற பராமரிக்கும் டிரைவர் மற்றும் நடத்துனர்களை, பாராட்டாத பயணிகளே இல்லை எனலாம்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-பிப்-201906:27:00 IST Report Abuse
 nicolethomson அவங்களோட சொந்த காசில் செய்திருப்பது பாராட்டுக்குரியது, நானும் செய்கிறேன் என்று பயணியர் மடியில் கை வைக்காதவரை மற்றவரும் இதனை முன்மாதிரியாக பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201918:33:05 IST Report Abuse
J.V. Iyer தென் கொரியாவில் பார்த்திருக்கிறேன், ஓட்டுநர்களே, பேருந்தை சுத்தம் செய்வார்கள். மிகவும் நன்றாக வைத்துக் கொள்வார்கள். தமிழ் நாட்டில் ஓட்டுநர், நடத்துனர் என்று இருவர். எல்லோரும் இவர்களைப்போன்று சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது அவர்கள் கடமை.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
13-பிப்-201917:46:40 IST Report Abuse
Rahim Gani இந்த பெரிய மனதுக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும் ,தனியார் பஸ் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசு பஸ்ஸிற்கு வரும் பயணிகளை தனியார் பஸ்ஸிற்கு அனுப்பும் சில ஓட்டுநர் நடத்துனர்க்கு மத்தியில் இவர்களை போன்ற உண்மை ஊழியர்களை அரசு கௌரவிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X