பெரியாறு அணைக்கு நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து

Added : பிப் 12, 2019
Advertisement

கூடலுார்:நீர்பிடிப்பில் பெய்த மழையால், பல நாட்களுக்குப் பின், பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.பெரியாறு அணையின் மொத்த உயரம், 152 அடி. அணைக்கு நீர்வரத்தே இல்லாமல், நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வந்தது. நேற்று காலை நிலவரப்படி, நீர்மட்டம், 116.10 அடியாக இருந்தது.இந்நிலையில், மழை காரணமாக, நேற்று காலையில் அணைக்கு நீர்வரத்து, 303 கன அடியாக இருந்தது. நீர்பிடிப்பில் மழை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் சற்று உயர வாய்ப்புள்ளது. ஆனால், நேற்று பகல் முழுவதும், கடுமையான வெப்பம் நிலவியதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X