சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் சிறுத்தை: விரைவில் வண்டலுார் பயணம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் சிறுத்தை: விரைவில் வண்டலுார் பயணம்

Added : பிப் 12, 2019
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பாட்டவயல் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை, விரைவில் வண்டலுார் மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டிற்குள் கடந்த, 5ல் சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையின் முதுகு, கால்பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தினசரி மூன்று நேரமும், வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், டாக்டர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். காயங்கள் குணம் ஆனவுடன், அதனை வண்டலுார் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.கூடலுார் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலுார் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உத்தரவு வந்தவுடன், வண்டலுார் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X