பஜாரில் பஸ் இயக்க எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஜாரில் பஸ் இயக்க எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் முறையீடு

Added : பிப் 12, 2019
Advertisement

விருதுநகர்:பஜார் வழியாக பஸ் இயக்குவதால் வியாபாரிகள் பாதிப்பதாக இந்து நாடார் வணிகர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் குறை தீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., உதயகுமாரிடம் மனு அளித்தனர்.அதில்,' பிப்., 9 முதல் விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பள்ளி மாணவர்கள், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பஜாரில் ஒரு பஸ் செல்லும் அளவிற்குதான் இடம் உள்ளது. காய்கறிகள், பால், மளிகை பொருட்கள் காலை 8:00 மணி, பகல் 1:00 முதல் 4:00 மணிவரை லாரிகளில் பொருட்கள் ஏற்றி, இறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்நிலை இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கின்றனர். ஏற்கனவே உள்ளது போன்று நடைமுறை படுத்த வேண்டும்,'என கேட்டுள்ளனர்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வழங்கிய மனுவில், ''ராமமூர்த்தி ரோடு பாலத்தை விரைந்து திறக்க வேண்டும். குப்பை இல்லாத நகரமாக்கவும், புதிய பஸ் ஸ்டாண்ட்டை செயல்படுத்த வேண்டும். மெயின் பஜாரில் பஸ்கள் இயக்குவதால் வியாபாரிகள் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். இதை தவிர்க்க வேண்டும்,'' எனகேட்டுள்ளார்.எஸ்.பி., யிடம் புகார் இதுபோல் விருதுநகர் மாவட்ட தமிழ்பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் ராமராஜ் தலைமையில் எஸ்.பி., ராஜராஜன்யிடம் வழங்கிய மனுவில்,' மாவட்டத்தில் 1,800 நடன கலைஞர்கள் , குடும்பங்கள் உள்ளன. சில மாதங்களாக நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.நடன நிகழ்ச்சிகள் எந்த ஆபாசமும் இன்றி அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடத்துகிறோம். இரட்டை அர்த்தம் உள்ள பாடல், மதம், ஜாதி, அரசியல் ரீதியாக அடுத்தவர் மனம் புன்படும் வகையிலான பாடல்கள் இருக்காது.இரவு 7:00 முதல் 10:00 மணிவரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்,' என கோரி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X