கூட்டுறவு இயக்குனர் பதவி தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு இயக்குனர் பதவி தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனு

Added : பிப் 12, 2019
Advertisement

விருதுநகர்:மீசலுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பொதுப்பிரிவினருக்கான இயக்குனர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.விருதுநகர் அருகே மீசனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தல் 2018 மார்ச்சில் நடந்தது. 11 நிர்வாக குழு உறுப்பினர்கள் மனுத்தாக்கலின் போது வழக்கறிஞர் ஜெகதீசன் மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெகதீசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ராமநாதன், பொதுப்பிரிவு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறு பதவிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டார்.அதன்படி தலைவர், துணைத்தலைவர் பதவி ரத்தானது. மாநில கூட்டுறவு சங்கங்களின் தெற்கு மண்டல குழு தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடவடிக்கைகள் துவங்கின.நேற்று திருச்சழி சார்பதிவாளர் குருபரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மனு தாக்கல் நடந்தது. சிலர் பொது பிரிவு இயக்குனர் பதவிக்கும் வேட்பு மனு கோரினர். தேர்தல் அலுவலர், '' வழக்கு தொடர்ந்த நபரின் மனுவை ஏற்கவும், ஏற்கனவே தகுதியுடைய 5 வேட்பாளர்கள் மனுக்கள் மட்டுமே ஏற்க ஆணையம் உத்தரவிட்டதால் தகுதியுடைய 5 பேர் மனுவும் ஏற்கப்பட்டது. மற்றவர்கள் மனு தாக்கல் செய்ய இயலாது ,''என்றார். இதனால் கூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய ஆர்வமாக இருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X