வராத குடிநீருக்கு தொட்டி; தள்ளாடவைக்கும் தரமற்ற ரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வராத குடிநீருக்கு தொட்டி; தள்ளாடவைக்கும் தரமற்ற ரோடு

Added : பிப் 12, 2019
Advertisement

அல்லல்படும் அம்பேத்கர் காலனி மக்கள்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் குடிநீர் மேல்நிலை தொட்டியானது பல ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளதோடு, தெருக்களில் உள்ள தரமற்ற ரோடால் தவிக்கும் நிலையில் அம்பேத்கர் காலனி மக்கள் உள்ளனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது அம்பேத்கர் காலனி மற்றும் நரிக்குறவர் காலனி. இந்த இரண்டு காலனிகளும் நகராட்சியா ஊராட்சியா என் பிரச்னையால் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. சுக்கிலநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது என நீதிமன்றம் தீர்ப்பு வந்த பின்னும் ஊராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளவில்லை. தாமிரபரணி குடிநீர் மேல்தொட்டி கட்டி பல ஆண்டுகளாகியும் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. மக்கள் குடிநீரின்றி அருப்புக்கோட்டை நகராட்சிக்கு அலுவலகத்திற்கு சென்று கைவண்டி மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மினிபவர் பம்ப் இருந்தும் பழுதாகி விட்டதால் தண்ணீர் வரவில்லை. பொது அடிகுழாய்களும் இல்லை. தண்ணீர் எடுக்கவே தினமும் பலமணிநேரம் செலவிட வேண்டியுள்ளதாக இப்பகுதி பெண்கள் புகார் கூறுகின்றனர். தெருக்களில் ஒரு வழியாக தார் ரோடு அமைத்தும் தரமில்லாமல் அமைத்ததால் அதற்குள் ரோடு பெயர்ந்து விட்டது. வாறுகால் வசதி இல்லை. தெருக்களில் கழிவு நீர் ஓடுகிறது. காலனியில் வீடு கட்டி தர அரசு நிலம் ஒதுக்கியும் வீடு கட்டி தர வில்லை. இதனால் பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டெண்ட் அடித்து தங்கி உள்ளனர். சுக்கிலநத்தம் மெயின் ரோட்டிலிருந்து காலனிக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. தனியார் நிலத்தில் பாதை அமைத்து சென்று வருகின்றனர். அருகில் நகராட்சி குப்பை கிடங்கு இருப்பதால் கொசு தொல்லை, கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.காட்சி பொருளான குடிநீர் தொட்டிகுடிநீர் மேல்நிலை தொட்டி பல ஆண்டுகளாக தண்ணீரின்றி காட்சி பொருளாக தான் உள்ளது. குடிநீருக்காக நாங்கள் தினமும் அலைகிறோம். ரூ. பல லட்சம் செலவழித்து கட்டப்பட்ட மேல்தொட்டியும் பயன்பாடின்றி கிடக்கிறது. இங்கிருந்து 2 கி.மீ.,துாரம் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்று பெண்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். அதிக விலை கொடுத்தும் தனியார் இடத்தில் குடிநீரை வாங்குகிறோம்.கலைவாணி, குடும்ப தலைவி.தரமற்ற ரோடால் அவதிகாலனி தெருக்களில் ரோடு வசதி இல்லை. சமீபத்தில் தான் தார் ரோடு அமைத்தனர். ரோடு அமைத்த சில நாட்களிலே பெயர்ந்து விட்டது. லட்சக் கணக்கில் அரசு பணத்தை வீணடிக்கின்றனர். மெயின் ரோட்டில் இருந்து காலனி வரும் பாதையை சரி செய்து , முறையான பாதை அமைக்க வேண்டும். காலனியில் தெரு விளக்கு வசதி வேறு செய்ய வேண்டும்.பாரதி, குடும்ப தலைவி.தேங்கும் கழிவு நீர்தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. முறையான வாறுகால் வசதி கோரியும் பயன் இல்லை. கொசு தொல்லை தாங்க முடியவில்லை. அருகில் நகராட்சி குப்பை கிடங்கு வேறு இருப்பதால் ஏற்படும் நாற்றத்தால் உடல் நலம் கெடுகிறது. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அரசு யோசிக்கிறது.சுகன்யா, குடும்ப தலைவி.வீடுகளுக்கு வழி இல்லைகாலனியில் வீடு கட்டி தர அரசு எங்களுக்கு இடத்தை ஒதுக்கி ஒரு சில பயனாளிகளுக்கு வீடு கட்டி தர தோண்டியதோடு சரி. இதுவரை பணிகள் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒதுக்கப்பட்ட இடத்தில் டெண்ட் அடித்து வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடு கட்டி தர அரசு மனது வைக்க வேண்டும்.மகாதேவன், தொழிலாளி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X