மாணவர்களுக்கு சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவம்

Added : பிப் 12, 2019
Advertisement

நீதிபதி பேச்சு
மதுரை:''மனதளவிலும், உடலளவிலும் சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி வெங்கடராமன் தெரிவித்தார்.மதுரை காமராஜ் பல்கலை 52வது பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடந்தது. துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.சிண்டிகேட் உறுப்பினரும் தினமலர் இணை நிர்வாக ஆசிரியருமான டாக்டர் ஆர்.லட்சுமிபதி, உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லில்லிஸ் திவாகர், பாரி பரமேஸ்வரன், ராஜ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.வெங்கடராமன் பேசியதாவது:பட்டம் பெற்ற நீங்கள் சமுதாயத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்புடன் பதில் கூறும் இடத்திற்கு உயர்ந்துள்ளீர். சமூகத்தில் எழும் சவால்களை மனதாலும், உடல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்ட பாடத்தில் இருந்து புதிய பரிணாமத்துடன் வளர்ச்சி பெற்றவராக திகழ வேண்டும்.உரிய இலக்கை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்போது வெற்றி சாத்தியமாகும். கிடைக்கும் வாய்ப்புக்களை இலக்கை அடையும் படிக்கட்டுக்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளை வகித்தாலும் மனித நேயம் மிக்கவராக, எளிமையானவருக்கு உதவி செய்பவராகவும் இருக்க வேண்டும் என்றார்.விழாவில் 634 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X