சிறு தொழில்களை ஊக்குவிப்பு பட்ஜெட்ராஜபாளையம் வர்த்தக சங்கம் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு தொழில்களை ஊக்குவிப்பு பட்ஜெட்ராஜபாளையம் வர்த்தக சங்கம் பாராட்டு

Added : பிப் 12, 2019
Advertisement

ராஜபாளையம்:கடுமையான நிதி நெருக்கடியிலும் வரி ஏதுமின்றி சிறு தொழில் ஊக்குவிப்பு பட்ஜெட் அமைந்துள்ளதாக ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.சங்க செயலாளர் வெங்கடேஸ்வரராஜா அறிக்கை: கடுமையான நிதி நெருக்கடியிலும் சாதாரண மக்கள் மீது வரி சுமை இன்றி போடப்பட்ட பட்ஜெட்.சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்காக தொழில் மேம்பாட்டு கழகம் உருவாக்கி உள்ளது வரவேற்கதக்கது. தடையற்ற முழு அளவு மின்சாரம் வழங்க தனியாக மின்பாதைகள் அமைக்கப்பட இருப்பதும், வர்த்தக முதலீட்டு மேம்பாட்டு மையம் ஏற்படுத்த இருப்பதும் பாராட்ட படும் வகையில் உள்ளது. தொழில் துறைக்கு ரூ.2கோடியே 747லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து திறமை மிக்க பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.பழம்,காய்கறி, சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களுக்கு 50கோடியும், ஒருங்கிணைந்த உணவு பதப் படுத்தும் பூங்கா அமைக்க ரூ.2000கோடி முதலீட்டில் அமைக்கப்பட இருப்பதும் வரவேற்க கூடியது.அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை பற்றி பட்ஜெட்டில் குறிப்பிட்டதில் வணிகர் நல வாரியத்தை பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை, என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X