விலங்குகளுக்கு தண்ணீர்: வனத்துறை நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளுக்கு தண்ணீர்: வனத்துறை நடவடிக்கை

Added : பிப் 12, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வகையில் தற்காலிகமாக கூடுதல் தண்ணீர் தொட்டிகளை வனத்துறை அமைத்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சிமலை, சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலயம் 454 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் என 4 வனசரகங்களாக பிரித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை, மான், காட்டு மாடு, செந்நாய், சாம்பல் நிற அணில்கள் உட்பட பல்வேறு வனஉயிரினங்கள் வசித்து வருகின்றன.பிளவக்கல் அணை, தாணிப்பாறை, செண்பகதோப்பு, அழகர்கோயில், அய்யனார்கோயில், சாஸ்தா கோயில் பகுதிகளில் இயற்கையாகவே அமைந்துள்ள நீர் ஆதாரப்பகுதிகளில் வனவிலங்குகள் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2015க்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் போதிய மழையில்லை. கடந்தாண்டு பெய்த மழையில் கூட மலையடிவார பகுதிகளில் தான் தண்ணீர் கிடைத்ததே தவிர கிராம கண்மாய்களில் போதிய தண்ணீர் வரத்து இல்லை. நீர் ஆதாரப்பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதை போக்கும் விதத்தில் ஏற்கனவே அமைக்கபட்டுள்ள நிரந்தர தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதோடு தற்காலிக தண்ணீர் தொட்டிகளையும் ஏற்படுத்தி தண்ணீர் நிரப்பபட்டு வருகிறது. சாப்டூர் வனபகுதியில் 6 இடங்களில் இருக்கும் நிரந்தர தண்ணீர் தொட்டிகளுடன், தற்போது கூடுதலாக 14 இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பபட்டு வருவகிறது.மற்ற வனசரகத்திலும் தொட்டிகள் அமைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X