சுகாதாரக்கேடு! பூங்காவில் நடை பயிற்சி செய்வோருக்கு... ஊரணியில் பாதாள சாக்கடை கழிவு நீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரக்கேடு! பூங்காவில் நடை பயிற்சி செய்வோருக்கு... ஊரணியில் பாதாள சாக்கடை கழிவு நீர்

Added : பிப் 12, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதால் நடை பயிற்சி செய்வோருக்கும், பூங்காவிற்கு செல்பவர்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ராமநாதபுரம்-மதுரை ரோடு மூலக்கொத்தளம் பகுதியில் சிதம்பரம்பிள்ளை ஊரணி உள்ளது. கழிவு நீர் குட்டையாக இருந்த பகுதியை கலெக்டராக இருந்த நந்தகுமார் பூங்காவாக மாற்றி நடுவில் ஊரணி அமைத்து, நடை பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார். இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நடை பயிற்சிக்காக வருகின்றனர். சிறுவர்கள் பூங்காவில் பொழுது போக்காக வந்து செல்கின்றனர். கழிவு நீர் கலப்பு: பூங்காவை ஒட்டிய பகுதியில் மதுரை ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிப்பு மையம் நகராட்சி நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் ஏற்பட்ட பழுதால் கழிவு நீர் வெளியேறி சிதம்பரம்பிள்ளை ஊரணியில் கலக்கிறது. துர்நாற்றத்துடன் கழிவு நீர் கலப்பதால் நடை பயிற்சிக்கு பூங்காவிற்கு செல்பவர்களுக்கு துர் நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கழிவு நீர் ஊரணிக்குள் பாய்கிறது. இதனை தடுக்க நகராட்சி அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி உதவி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு கூறுகையில், பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. பணிகள் நிறைவு பெற்றதும் ஊரணிக்கு செல்லும் கழிவு நீர் நிறுத்தப்படும்,என்றார். பாதாள சாக்கடை கழிவு நீர் சிதம்பரம்பிள்ளை ஊரணியில் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X