பெயரளவில் வழிகாட்டிகள் திசைமாறும் வாகனங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெயரளவில் வழிகாட்டிகள் திசைமாறும் வாகனங்கள்

Added : பிப் 12, 2019
Advertisement

திருவாடானை:சின்னக்கீரமங்கலத்தில் வழிகாட்டும் போர்டுகள் பெயரளவில் இருப்பதால் வாகனங்களில் வரும் வட மாநில பயணிகள் திசைமாறி சிரமப்படுகின்றனர். திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. மதுரை- தொண்டி, திருச்சி- ராமேஸ்வரம் இணைப்பு சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ராமேஸ்வரம் செல்லும் டூரிஸ்ட் பஸ்கள் இந்த வழியாக செல்வது வழக்கம். நான்கு ரோடு சந்திக்கும் ரவுண்டானாவில் வழிகாட்டும் போர்டுகள் துாரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் சிறிதாக வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகளும் பலத்த காற்று வீசும் போது திரும்பி விடுகின்றன.நள்ளிரவு வாகனங்களில் செல்லும் வடநாட்டு பயணிகள் திசைமாறி பல கி.மீ., செல்கின்றனர். பின் மீண்டும் அக்கம் பக்கத்தில் விசாரித்து ராமேஸ்வரம் சாலையில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். வழிகாட்டும் போர்டு அத்தியாவசிய தேவையாக இருப்பதால், பெரிய அளவில், இரவிலும் அனைவருக்கும் தெரியும் வகையில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X