பாம்பன் பாலத்தில் 'விளம்பர சூட்டிங்' போக்குவரத்து நெரிசல்; பயணிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் 'விளம்பர சூட்டிங்' போக்குவரத்து நெரிசல்; பயணிகள் அவதி

Added : பிப் 12, 2019
Advertisement

ராமேஸ்வரம்:பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விளம்பர படப் பிடிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிப்பட்டனர். கடந்த 1988ல் அமைத்த பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் கடந்தாண்டு அமைத்த 'வழுவழு' சாலையால் நுாறுக்கும் மேற்பட்ட விபத்துக்களும், பாலத்தில் நிறுத்தும் சுற்றுலா வாகனங்களால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது.இதனை தவிர்க்க பாலத்தில் நிறுத்தும் வாகனத்தை அப்புறப்படுத்தவும், மீறினால் 600 ரூபாய் அபராதம் விதிக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். அதன்படி பாலத்தில் நிறுத்தும் வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலையில், தனியார் மோட்டார் நிறுவனம் (யமஹா) புதிய ஸ்கூட்டி பைக்கை அறிமுகப்படுத்துவதற்காக நேற்று பாம்பன் பாலத்தின் நடுவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த விளம்பர பட இயக்குனர், ஒளிபதிவாளர்கள், மும்பையை சேர்ந்த நான்கு மாடலிங் நடிகர், நடிகைகள் ஸ்கூட்டியை ஓட்டி செல்வது போல் பாலத்தில் 3 மணி நேரம் சூட்டிங் எடுத்தனர். இதனால் பாலத்தின் இருபுறத்திலும் அடிக்கடி வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிபட்டனர். 30 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலத்தில் வாகனம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பாலம் பலம் இழக்கும். எனவே இனி வரும் காலத்தில் பாலத்தில் விளம்பரம், சினிமா பட சூட்டிங் எடுக்க அரசுஅனுமதிக்க கூடாது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X