லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சியும் ஆட்சியும் எங்களுக்கே சொந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சியும் ஆட்சியும் எங்களுக்கே சொந்தம்

Added : பிப் 12, 2019
Advertisement

ராமநாதபுரம்:லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சியும், ஆட்சியும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று, ராமநாதபுரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.ராமநாதபுரத்தில் நடந்த அ.ம.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:தஞ்சை டெல்டாவில் 10 எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கும். இதை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிவில்லை, அ.தி.மு.க.,வின் 90 சதவீதத்திற்கும் மேலான தொண்டர்கள் அ.ம.மு.க.,வில் தான் இருக்கிறார்கள். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களுக்குதான் கட்சியும், ஆட்சியும் எங்களுக்கே சொந்தம். துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறிக்கையில் பிரிந்தவர்கள் மனம் திருந்தி வரவேண்டும் என்றிருந்தார். நாங்கள் திருந்த வேண்டியதில்லை. நீங்கள் திருந்தி அ.ம.மு.க.,வில் இணையுங்கள். ஒன்றிணைந்து ஆட்சி செய்யலாம். ஆனால் அ.தி.மு.க.வுடன் இணைப்பு இல்லை. பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கியதில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்தை எங்கிருந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை.வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால் தமிழக மக்கள் அவர்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தருவார்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X