சீர்மரபினர் சமுதாயத்தினர் பெயர் மாற்றம் செய்வது குறித்த கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீர்மரபினர் சமுதாயத்தினர் பெயர் மாற்றம் செய்வது குறித்த கூட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

ராமநாதபுரம்:கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் சீர்மரபினர் சமுதாயத்தினர் என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்யக்கோரிய ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.பெயர் மாற்றம் தொடர்பாக வரப்பெற்ற கோரிக்கைகளை ஆராய்ந்து அரசுக்கு சமர்பிப்பது தொடர்பாக வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஆய்வுக்குழு செய்யப் பட்டது. மாவட்டத்திலுள்ள பல்வேறு சீர்மரபினர் நலச்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு சீர்மரபினர் சமுதாயத்தினர் டி.என்.சி., என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் டி.என்.டி., என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக தங்கள் கருத்துக்களை வழங்கினர். எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பின் அதுல்ய மிஸ்ரா பேசியதாவது: சீர்மரபினர் தங்களது சமுதாயத்தை சீர்மரபினர் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடை பெற்றது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X