பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான் நில மோசடி வழக்கு : வாத்ரா இன்று ஆஜர்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நில மோசடி வழக்கில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் இன்று ஆஜராகிறார்.



latest tamil news



ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை. 'இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீனும், அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.


latest tamil news



அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் இன்று ஆஜராக உள்ளனர்.

முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201911:29:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எல்லா மாநிலத்திலேயும் அரசாங்க நிலத்தை ஆட்டையை போட்டு விற்றிருக்கிறான். கொஞ்சம் விட்டிருந்தால் இந்தியாவையே பிளாட் போட்டு விற்றிருப்பான்.
Rate this:
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
12-பிப்-201911:21:38 IST Report Abuse
T M S GOVINDARAJAN காங்கிரஸ்காரர்கள் தான் கில்லாடி என்று நினைத்தால் ஊழல் செய்வதில் நாட்டை கொள்ளை அடிப்பதில் மதக்கலவரம் உண்டாக்குவதில் குண்டுவெடிப்பு கலாச்சாரங்களில் கில்லாடிகள் ஆனால் இங்கே கருத்து எழுதும் காங்கிரஸ் அல்லக்கைகள் 17 வருடங்களுக்குப் பிறகு பிளாட் விலையை பற்றி கட்டிட விலையை பற்றி எவனாவது வருவானா அவ்வளவு பித்தலாட்டமான கருத்துக்களை பதிவு செய்வது இவர்களெல்லாம் காங்கிரசில் ஒரு வழியாக மந்திரி பதவி கிடைத்தால் அடுத்த நாட்டுக்கு கூட்டிக் கொடுத்து விட்டு போய் விடுவார்கள் இங்கு இருக்கும் நல்லவர்களுக்கு மிகவும் சோதனையான காலம்தான் இந்த காங்கிரஸ் அல்லக்கைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் என்னதான் நல்லது நடந்தது தெரியவில்லை இவர்களுக்கு இறைவன் தான் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க தாய்நாடு
Rate this:
Cancel
12-பிப்-201911:17:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் திருட்டு பயல்கள் விசாரணைக்கு ஆஜராக கூட நீதிமன்றம் உத்தரவு போட வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பணம், அதிகார திமிர். என்று இந்த நாட்டின் சட்டம் அனைவர்க்கும் சமமாக செயல்படுகிறதோ அன்று தான் இந்த நாட்டிக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X