நெடுஞ்சாலை போக்குவரத்து குற்றம் புகார் தெரிவிக்க பொது அலைபேசி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை போக்குவரத்து குற்றம் புகார் தெரிவிக்க பொது அலைபேசி

Added : பிப் 12, 2019
Advertisement

ராமநாதபுரம்:நெடுஞ்சாலைகளில் நடக்கும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துக்கள் குறித்து புகார் தெரிவிக்க பொது அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, போலீஸ் துறை இயக்குனர் வழி காட்டுதலின் பேரில் நெடுஞ்சாலையில் நடக்கும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துக்கள் குறித்து 94981 81457 என்ற பொது அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த அலைபேசி சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக பிரச்னைகள் சரி செய்யப்படும். சாலை விபத்துக்கள் சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பிறர் உயிர், உடமைகளை காக்கும் பொருட்டு 94981 81457 என்ற பொது அலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு ராமநாதபுரம் டி.ஐ.ஜி., காமினி, ஓம்பிரகாஷ்மீனா எஸ்.பி., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X