இருவர் பலியான இடத்தில் நகைகளுடன் கிடந்த பை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருவர் பலியான இடத்தில் நகைகளுடன் கிடந்த பை

Added : பிப் 12, 2019
Advertisement

தொண்டி:விபத்தில் இருவர் பலியான இடத்தில் தங்க நகைகளுடன் கிடந்த பையை போலீசார் கைப்பற்றினர்.சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார் 42, இவரது மனைவி கிரிஜா 40, மகள் மோனிகா 12, மகன் தேஜஸ் 4, உறவினர் சுரேஷ் 45, மனைவி சசிகலா 43. கிரிஜாவும், சசிகலாவும் சகோரிகள். ஆனந்தகுமார் தனியார் கம்பெனியால் மேற்பார்வையாளராகவும், சுரேஷ் அரசு டவுன் பஸ் கண்டக்ராகவும் வேலை பார்க்கின்றனர். எஸ்.பி.பட்டினம் அருகே நேற்று முன்தினம் நடந்த விபத்தில் ஆனந்தகுமாரும், சசிகலாவும் இறந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சுரேஷ் காரை ஓட்டியுள்ளார். பனை மரத்தில் கார் மோதிய சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் மகேஷ் மற்றும் கிராம மக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தங்க நகைகளுடன் பை கிடந்தது. அதையும், பெண்கள் அணிந்திருந்த நகைகளும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X