சேதமடைந்த விடுதி கட்டடம் அச்சத்தில் மாணவர்கள் தவிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த விடுதி கட்டடம் அச்சத்தில் மாணவர்கள் தவிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

சிக்கல்: சிக்கல் பகுதியில் சேதமடைந்த ஆதிதிராவிட நலத்துறை விடுதி கட்டடத்தில் அச்சத்துடன் மாணவர்கள் தங்குகின்றனர். கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கல் கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. 2003ல் கட்டப்பட்ட இக்கட்டடம் முதல் தளம் மற்றும் மாடியுடன் அமைந்துள்ளது. இங்கு காப்பாளர், காவலர், சமையலர் பணியாற்றுகின்றனர்.ஆறு முதல் பிளஸ் 2 வரை 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 58 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 கி.மீ.,ல் உள்ள விடுதிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர். தரை தளத்தின் சுவர்கள், முகப்பு சுவர்கள், மாடியில் உள்ள இரும்பு ஜன்னல்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் உள்ளது. விடுதி வரவேற்பு பகுதியில் மேற்கூரைப்பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுகிறது.மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், விடுதியின் மேற்கூரைப் பூச்சுகள், கான்கிரீட்டுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. சுண்ணாம்பு பூசாமலும், மராமத்து செய்யாமலும் உள்ளதால், விடுதி பாழடைந்த கட்டடம் போல் உள்ளது.இதனால் மாணவர்கள் அச்சத்துடன் தங்கியுள்ளனர்.ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் விடுதியில் ஆய்விற்கு செல்வதில்லை. கண்டுகொள்ளாத அதிகாரிகளால் சேதமடைந்த விடுதியில் விபத்து அபாய நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விடுதி மாணவர்களின் நலன்கருதி மராமத்து பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X