பள்ளமோர்க்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளமோர்க்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

Added : பிப் 12, 2019
Advertisement

திருப்புல்லாணி:தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர்க்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டல் மக்கள் தவிக்கின்றனர். திருப்புல்லாணி அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளமோர்க்குளம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை. குடிநீர் குழாய்கள் காட்சிப் பொருளாக பராமரிப்பின்றி சேதமடைந்துஉள்ளன. கிராமத்தில் 1800 பேர் வசிக்கின்றனர். மழை பெய்தால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. தொடக்கப்பள்ளி அருகே இருந்து சாலை அமைக்காததால் மண் மேவியுள்ளது. பி.மோர்க்குளத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், காவிரி குடிநீர் செல்லும் பைப் லைன் சேதமடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடம் குடிநீர் 6 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். பள்ளி மாணவர்கள், முதியவர்கள் சாலை வசதியில்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதுகுறித்து திருப்புல்லாணி பி.டி.ஓ.,விடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர், சாலை வசதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X