6,000 அடி மலையில் சுற்றுலா பயணிகள் : விபரீதத்தை தடுக்குமா தமிழக அரசு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

6,000 அடி மலையில் சுற்றுலா பயணிகள் : விபரீதத்தை தடுக்குமா தமிழக அரசு

Added : பிப் 12, 2019
Advertisement

தேனி:''கொழுக்குமலை அருகில் 6 ஆயிரம் அடி உயர 'திப்படா' மலைக்குன்றுக்கு செல்லும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து உள்ளது. தமிழக அரசு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, தேனி டி.ஆர்.ஓ.,கந்தசாமியிடம், கொழுக்குமலை எஸ்டேட் மேலாளர் ஜானி நவகுமார் மனு அளித்தார்.அவர் கூறியதாவது: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியிலிருந்து 12 கி.மீ.,ல் கொழுக்குமலை அமைந்துள்ளது.
எஸ்டேட் நுழைவாயில் பகுதியில் இருந்து 162 மீட்டருக்கு முன்னதாக, வேறு பாதையில் கேரள அரசு அனுமதி அளிக்காத ஆபத்தான 'திப்படா' மலைக்குன்றுக்கு கேரள பயணிகள், வெளிநாட்டினர் சூரிய உதயத்தை பார்க்க ஜீப்களில் செல்வது அதிகரித்துள்ளது. அங்கேயே குப்பையும் கொட்டுகின்றனர்.
6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அக்குன்று தமிழகத்தின் எல்லைக்குள் வருவதால் தமிழக அரசு,இதை கண்காணிக்காவிட்டால் இன்னொரு குரங்கணி தீ விபத்து போல விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.தற்போது காட்டுத்தீ பரவும் காலம் என்பதால் தேனி வனத்துறை ஏப்.. 15 வரை குரங்கணி - டாப் ஸ்டேஷன், கேரள வனத்துறை, சூரியநெல்லி - கொழுக்குமலை 'டிரக்கிங்' செல்ல தடைவிதித்துள்ள நிலையில் பயணிகள் விதிமீறி 'திப்படா' பகுதிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X