தற்காலிக தடுப்பணை அமைக்க முக்கொம்பில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக தடுப்பணை அமைக்க முக்கொம்பில் ஆய்வு

Added : பிப் 12, 2019
Advertisement

திருச்சி: திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில், பழமையான அணை உடைப்பு ஏற்பட்ட பகுதியில், தற்காலிக தடுப்பணை அமைப்பது தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்துள்ளனர்.
திருச்சியில், முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில், 1836ம் ஆண்டு, ஆங்கிலேய பொறியாளர், ஆர்தர் காட்டன் என்பவரால், செங்கல் மற்றும் காரை கலவையால் அணை கட்டப்பட்டது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 22ல், அணைப் பாலத்தில் உள்ள, ஒன்பது மதகுகள் இடிந்து விழுந்தன. ஆகஸ்ட் 24ல், இதை பார்வையிட்ட, தமிழக முதல்வர், ஓ.பி.எஸ்., 'இடிந்து விழுந்த அணைக்கு அருகே, புதிய அணை கட்டப்படும்' என, அறிவித்தார். இதன்படி, 387.60 கோடி ரூபாய் செலவில், புதிய அணை கட்டுவதற்கு, சர்வதேச அளவிலான கட்டுமான நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. புதிய அணை கட்டுமானப் பணிகள் முடிய, குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த காலக் கட்டத்தில், ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டால், புதிய அணை கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதோடு, உடைப்பை சீரமைக்க அடுக்கப்பட்ட மண் மூட்டைகள், பாறைகள் போன்றவையும் ஆற்றில் அடித்துச் செல்லப்படும். இதனால், புதிய அணை கட்டுவதற்கு முன், இடிந்த அணைக்கு அருகே, 38.85 கோடி ரூபாய் செலவில், இரும்பு தகடுகளால், தற்காலிக தடுப்பணை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. ஈரோட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திடம், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் கட்டுமான நிறுவன பொறியாளர்கள், முக்கொம்பில், கொள்ளிடம் அணை இடிந்து விழுந்த பகுதியை பார்வையிட்டனர். தொடர்ந்து, பொதுப் பணித்துறை பொறியாளர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணியை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X