புதுடில்லி : பீஹாரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நடந்துள்ள பாலியல் வன்முறை தொடர்பாக விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரி, ஏ.கே. சர்மாவை, இடமாற்றம் செய்ததற்கு, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த, அப்போது இடைக்கால இயக்குனராக இருந்த, நாகேஸ்வர ராவ், 'இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டேன். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கனவிலும் நினைத்ததில்லை. நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்கிறேன்' என, கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE