ஆண்களுக்கு நவீன கருத்தடை: தங்க நாணயம் இலவசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்கு நவீன கருத்தடை: தங்க நாணயம் இலவசம்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (20)
Advertisement

சென்னை:'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம், மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடத்த உள்ளன.இந்த சிகிச்சை மேற்கொள்வோருக்கு, ஊக்கத் தொகையுடன், தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன.

ஆண்களுக்கான குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சையை, அரசுஊக்குவித்து வருகிறது. இதையடுத்து, மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில்,பல ஆண்டுகளாக, கருத்தடை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன் ஒரு பகுதியாக, வரும், 16ம் தேதி, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்பநல, நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது.இந்த முகாமில், கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு, அரசு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாயும், 'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம் சார்பில், அரை கிராம் தங்க நாணயம், 25 கிராம் வெள்ளி நாணயம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இது குறித்து, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர், ரவிச்சந்திரன் கூறியதாவது:தையல் இன்றி, தழும்புகள் இன்றி, இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மிகவும் எளிமையானது. மயக்க மருந்து கூட கொடுப்பதில்லை. பக்க விளைவுகளும் கிடையாது. சிகிச்சை முடிந்த உடன், வீட்டிற்கு சென்றுவிடலாம். இந்த சிகிச்சை மேற்கொள்ள, மற்றவர்களை அழைத்து வரும் நபர்களுக்கும், ஊக்கத் தொகையாக, 200 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விபரங்களுக்கு, 99620 81581, 90949 43939, 94428 07464 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201912:41:40 IST Report Abuse
முக்கண் மைந்தன் நவீனம், பளசு எப்டியிருந்தாலும் FUSE ச புடுங்கினது புடுங்கினதுதான்...
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
13-பிப்-201911:50:16 IST Report Abuse
Nakkal Nadhamuni இதெல்லாம் ஏழைகளை முகாமுக்கு வரவழைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201909:30:30 IST Report Abuse
ஆரூர் ரங் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதைவிட ஆண்கள் செய்துகொள்வது பாதுகாப்பானது .கிட்டத்தட்ட எவ்வித பின்விளைவுகளில்லை . வெற்றி சதவீதம் 99 .8% க்கும் மேல் . ஆனாலும் ஆண்கள் குக சிகிச்சையான வாசக்டமியால் ஆண்மை குறையும் 0என்ற மூடநம்பிக்கை பயத்தினாலேயே நூற்றிலொரு ஆண்தான் வாசக்டமி குக வுக்கு மனமுவந்து வருகிறார்கள் . இந்த பயத்தை போக்க பிரச்சாரம் தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X