ஜவுளிக்கடைகளில் அதிகாரிகள் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடைகளில் அதிகாரிகள் சோதனை

Added : பிப் 12, 2019
Advertisement

ஆம்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளர்களின், வீடு, கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், 45, செந்தில், 46, பழனியப்பா, 50. இவர்கள், ஆம்பூர் மெயின் பஜாரில், ஹாங்காங் ஜவுளி, பழனியப்பா ரெடிமேட், ஹாங்காங் ரெடிமேட் என்ற பெயரில் ஜவுளிக்கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களது, வீடு, கடைகளில், நேற்று, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள், 10 பேர், மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம், சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கைப்பற்றினர். தொடர்ந்து, சோதனை நடந்து வருகிறது. இதனால், சக வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X