புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : பிப் 12, 2019
Advertisement

இ-சேவை மையத்தை மாற்றக்கூடாது: வாழப்பாடியில், பயணியர் மாளிகை எதிரில் உள்ள அரசின் இ-சேவை மையத்துக்கு, பல்வேறு தேவைகளுக்காக தினமும், 500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால், சேலம்-சென்னை நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள புதிய தாலுகா அலுவலக கட்டட வளாகத்துக்கு, மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளன. எனவே, பழைய இடத்திலேயே இ-சேவை மையம் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.கமல்ராஜா, வாழப்பாடி.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி: பனமரத்துப்பட்டி, ச.ஆ. பெரமனூர் ஊராட்சி மேற்காடு பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு, ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கவில்லை. ஊராட்சி பணியாளர்களிடம் கேட்டால், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நிதி இல்லை என்கின்றனர். குடிநீருக்காக, விவசாய கிணறுகளை தேடி, மக்கள் அலைகின்றனர். குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி. ஜெயராமன், மேற்காடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X