பல்லவன் வங்கி சார்பில் ரூ.3.25 கோடி கடன் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்லவன் வங்கி சார்பில் ரூ.3.25 கோடி கடன் வழங்கல்

Added : பிப் 12, 2019
Advertisement

பெத்தநாயக்கன்பாளையம்: கருமந்துறையில், பல்லவன் கிராம வங்கியின் புதிய கட்டடம் திறப்பு விழா, மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து பேசினார். பல்லவன் கிராம வங்கி தலைவர் தனராஜ் பேசுகையில், ''பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைந்து, தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயருடன் ஏப்., 1 முதல், சேலத்தை தலைமையிடமாக கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும்,'' என்றார். பின், 45 மகளிர் சுய உதவி குழு, 130 கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு, 3.25 கோடி ரூபாய் கடன், முத்ரா திட்டத்தின் கீழ், 10 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய், கறவை மாடு வாங்க, 10 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முன்னதாக, பொதுமேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வட்டார மேலாளர் சந்திரன், கள்ளக்குறிச்சி எம்.பி.,காமராஜ், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கிராம ஒளி நிர்வாக இயக்குனர் சக்தி கிரி, இயக்குனர் மேகலா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X