ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கோரி மூன்று ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கோரி மூன்று ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

மேச்சேரி: இடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்திற்கு மாற்றாக, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேச்சேரி ஒன்றியம், மல்லகுந்தம், கூணான்டியூர், பள்ளிப்பட்டி ஊராட்சிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மூன்று ஊராட்சிகளிலும் நோயால் பாதித்த மக்கள், மல்லிகுந்தம் துணை சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றனர். அந்த கட்டடம் கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. ஓராண்டாக துணை சுகாதார நிலையம், மல்லிகுந்தம் சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது. மூன்று ஊராட்சி மக்கள் சிகிச்சை பெறுவதால், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும். அதில், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் எனக்கூறி, மூன்று ஊராட்சி மக்கள் நேற்று காலை இடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் இருந்த இடத்திற்கு முன்,ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X