ஊராட்சி பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கல்

Added : பிப் 12, 2019
Advertisement

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 125 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று நடந்த கல்விச்சீர் வழங்கும் விழாவில், புரொஜக்டர், புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், மைக் செட், அகராதிகள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து பொதுமக்கள் வழங்கினர். விழாவில் புரவலர்கள், 10 பேர் இணைந்தனர்.* கஞ்சநாயக்கன்பட்டி, பாப்பிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கல்விச்சீர் விழாவில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டன. அதே பகுதியில், பெரியாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டன.


* கோட்டைசோலைக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, பீரோ, மேஜை, நாற்காலி என, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் அமலா, வட்டார வளமேற்பார்வையாளர் செல்வம், தலைமையாசிரியர்கள், கனகலட்சுமி, கலையரசி, பாரதி, கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


* பெத்தநாயக்கன்பாளையம் அருகே முத்தாக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, ஊர் மக்கள் சார்பில், கல்வி சீர் வழங்கப்பட்டது. கணினி, மின்விசிறி, பாய்கள், பக்கெட், ஹோம் தியேட்டர் உள்பட, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள், தலைமையாசிரியர் ஷமீமிடம் வழங்கினர்.


* பெரியகிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, ஊர் மக்கள் சார்பில் பள்ளியை தூய்மைப்படுத்தும் வகையில், 5,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை தலைமையாசிரியர் சற்குணம் முன்னிலையில் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X