குடிநீர் இணைப்பு தராமல் ஊராட்சி செயலர் 'அடாவடி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் இணைப்பு தராமல் ஊராட்சி செயலர் 'அடாவடி'

Added : பிப் 12, 2019
Advertisement

சேலம்: சேலம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி, பாலாஜி நகர் போயர் தெருவை சேர்ந்த ரமேஷ், 47, நேற்று கலெக்டர் ரோகிணியிடம் மனு வழங்கினார்.
அதன்பின், அவர் கூறியதாவது: உடல்நிலை பாதிக்கப்பட்ட நான், வீட்டில் பஞ்சர் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். குடிநீர் இணைப்பு கேட்டு, வீட்டுவரி, மின் கட்டண ரசீது உள்ளிட்டவை இணைத்து, ஊராட்சியில் முறையாக விண்ணப்பித்தேன். மூன்று மாதங்களாகியும், இணைப்பு வழங்காமல் ஊராட்சி செயலர் சரவணன் தடுக்கிறார். காரணம் கேட்டால், உள்ளூர் அரசியல்வாதிகள், முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறார். உண்மையில், தாசநாயக்கன்பட்டியில், 50க்கும் மேற்பட்ட திருட்டு குடிநீர் இணைப்பு, சில இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் ஊராட்சிக்கு நிதியிழப்பு, பல வீடுகளில் முறைகேடாக இரு இணைப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டியதால், இணைப்பு வழங்கவில்லை. ஆளும் கட்சியினர் துணையோடு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் செயலர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதோடு எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X