புத்திரகவுண்டன்பாளையத்தில் வரும் 23ல் ஜல்லிக்கட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புத்திரகவுண்டன்பாளையத்தில் வரும் 23ல் ஜல்லிக்கட்டு

Added : பிப் 12, 2019
Advertisement

ஆத்தூர்: புத்திரகவுண்டன்பாளையத்தில் வரும், 23ல், ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா நடந்தது. ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையத்தில் வரும், 23ல், ஜல்லிக்கட்டு விழா முதன் முறையாக நடைபெறவுள்ளது. இதற்காக வாடிவாசல் அமைப்பதற்கான கால்கோள் விழா, கடந்த, 9ல், முன்னாள் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளருமான இளங்கோவன் தலைமையில் நடந்தது. விழா குழுவினர் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும், விலை உயர்ந்த பரிசு பொருட்களான கார், இருசக்கர வாகனங்கள், தங்க காசு, சைக்கிள், வாஷிங்மிஷின், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, குக்கர் போன்றவை வழங்கப்படவுள்ளன' என்றனர். ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X