நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகளுக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Added : பிப் 12, 2019
Advertisement

சேலம்: சேலம், கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 126.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 16 ஆயிரத்து, 933 ?ஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை, வேளாண் பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்காக, 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில், எவர்கிரீன் இர்ரிகேசன், பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிட் நிறுவனங்கள், நுண்ணீர் பாசன பணிகளை, இதுவரை மேற்கொள்ளவில்லை. பலமுறை அறிவுறுத்தியும் இரு நிறுவனங்கள், எந்த முயற்சியும் எடுக்காததால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், இந்த இரு நிறுவனங்களை அணுக வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X