'4ஜி' சேவை வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'4ஜி' சேவை வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

ஆத்தூர்: '4ஜி' சேவையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பில், ஆத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், ஊழியர்கள் சங்க மாவட்ட உதவி தலைவர் குமாரசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, அதிவேக தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைக்கு நான்காம் தலைமுறை எனும், '4ஜி' அலைக்கற்றை சேவை வழங்கக்கோரி, இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்துகிறோம். இன்று, (நேற்று) முதல், 15 வரை வீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மாதம், 35 ரூபாய் கொடுத்தால் தான், 'இன்கம்மிங் கால்' வரும் நிலையில், பி.எஸ்.என்.எல்., அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் சேவை வழங்குகிறது. '4ஜி' அலைக்கற்றை சேவை வழங்கினால், அதிவேக இணைய சேவை வழங்க முடியும். 4ஜி சேவையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஊழியர்கள் சங்க மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹரன், அதிகாரிகள் சங்க செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X