ராகுலை பிரதமராக்கும் எண்ணத்தில் மக்கள் உள்ளனர்: புதுச்சேரி முதல்வர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராகுலை பிரதமராக்கும் எண்ணத்தில் மக்கள் உள்ளனர்: புதுச்சேரி முதல்வர்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: ''மோடியை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம்; ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று சேலத்தில் கூறினார்.
ரயில் மூலம், மாகி செல்ல சேலம் வந்திருந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அப்பா பைத்திய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதன் முதலாக, அப்பா பைத்திய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளேன். தமிழகம், புதுச்சேரி மக்கள் நலமுடனும், அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காக வழிபாடு மேற் கொண்டுள்ளேன். எந்த கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். புதுச்சேரியில், 98 சதவீதத்தினர் தலைக்கவசம் அணியவில்லை. அதை படிப்படியாக அணிய செய்வது தான் எங்களுடைய நோக்கம். தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பா.ஜ., காலூன்றவும், தலை ஊன்றவும் முடியாது. அகில இந்திய அளவில், பா.ஜ., படுதோல்வி அடையும். மோடி அரசால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவசாயிகள், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மோடியை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம், ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்ற எண்ணத்தில் உள்ளனர். புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு ?ஹக்டேருக்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201911:49:58 IST Report Abuse
karthik பப்புவுக்கு பிரதமர் பதவி வேண்டாம் பலூண் போதும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X