ஓமலூர்: ''திருநாவுக்கரசர் பதவி பறிப்பு, ஒரு பெரிய விஷயமல்ல,'' என, புதிதாக நியமிக்கப்பட்ட, தமிழக காங்.,செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம் கூறினார்.
தமிழக காங்., செயல் தலைவராக நியமிக்கப்பட்ட, மோகன் குமாரமங்கலம் நேற்று சேலம் மாவட்டம், ஓமலூர் வந்தார். மேற்கு மாவட்ட காங்., தலைவர் முருகன் தலைமையில், வரவேற்பு அளிக்கப்பட்டது. காமராஜர், காந்தி, அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்த மோகன் குமாரமங்கலம், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், காங்., கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. தமிழக காங்., தலைவர் பொறுப்பில் இருந்த திருநாவுக்கரசரின் பதவி பறிப்பு என்பது, பெரிய விஷயமல்ல. அவர், 24 வயதிலிருந்து அரசியலில் உள்ளார். மத்திய, மாநில அமைச்சராக இருந்துள்ளார். அனைத்து பதவிகளையும் அனுபவித்துள்ளார். பதவி பறிக்கப்பட்டது குறித்து, அவர் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* மோகன்குமாரமங்கலம், முதன்முறையாக ஓமலூர் வருவதை வரவேற்க, வாகனங்களுடன் காங்கிரசார் திரண்டதால், அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு, வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.