பொது செய்தி

இந்தியா

பார்லி.,யில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பார்லிமென்ட், வாஜ்பாய், உருவப்படம், ஜனாதிபதி

புதுடில்லி: பார்லி., மைய வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

பா.ஜ.மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996 ,1998-99 மற்றும் 1999-2004-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் கடந்த 2018 ம்ஆண்டு ஆகஸ்டில் 93 வயதில் காலமானார். அவரை கவுரவிக்கும் விதமாக பார்லி. வளாகத்தில் வாஜ்பாய் உருப் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


பிரதமர் மோடி புகழாரம்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வாஜ்பாயின் நற்செயல்களை பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நீண்டு கொண்டு போகும். தற்போது, வாஜ்பாய் பார்லிமென்ட் மையமண்டபத்தில் இருந்து நம்மை வழிநடத்துவார். ஆசிர்வதிப்பார். வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. வாஜ்பாய்க்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. அவரது வாழ்க்கையில், பெரும்பகுதியில் எதிர்க்கட்சி தலைவராகவே கழித்தார். பொது மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய போதும், வாஜ்பாய் ஒரு போதும் தனது கொள்கையை விட்டு கொடுத்தது கிடையாது. அவரின் பேச்சுக்கள் மிகவும் பிரபலமானது. அவரது பேச்சில் ஒரு சக்தி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-பிப்-201916:18:47 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியாவின் பிதா மகன்.
Rate this:
Share this comment
Cancel
ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா
12-பிப்-201913:11:29 IST Report Abuse
ilitchavaya tamilan@naanum hinduthaan VP Singh avarkalukku piragu naan mathikkum migaperiya dhesiya aalumai. Vaajpai avargal meum pirathamaraga mudiyamal ponatharku kathari aluthavan naan. Enna thaan BJP yin kolgaikal sila pidikkamal ponaalum intha maamanithan en desathai munnetriyavar. Ayya un pondra aathma engalukku kidaippathu eppothu
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
12-பிப்-201912:29:14 IST Report Abuse
Rajavelu E. இந்த வாய்ப்புக்கூட அத்வானிக்கு கிடைக்க வில்லையா? பாவம்.
Rate this:
Share this comment
AR - ,
12-பிப்-201913:55:38 IST Report Abuse
ARஅப்போ ஆட்வாணிஜி பிரதமாயிருந்தா வாழ்த்தியிருப்பீங்களா? அப்போ அவர் மதச்சார்பற்றவர்தானே ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X