Money laundering case: Robert, maureen vadra appear before ed | ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை முன்பு தாயாருடன் வாத்ரா ஆஜர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை முன்பு தாயாருடன் வாத்ரா ஆஜர்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (37+ 17)
Advertisement

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் இன்று ஆஜரானார்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தான் பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை. 'இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீனும், அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.




அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை முன் வாத்ரா ஆஜராவது இது நான்காவது முறையாகும்.





முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (37+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John - Chennai,இந்தியா
13-பிப்-201912:11:19 IST Report Abuse
John ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு பேசத் தொடங்கியவுடன், ராணுவ சாதனங்களை வாங்குவதில் தவறு இருந்தாலும் அது ஊழல் நடவடிக்கையில் சேராது என்று முக்கியமான 8 பிரிவுகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
John - Chennai,இந்தியா
13-பிப்-201900:31:40 IST Report Abuse
John காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ராணுவ சாதனங்கள் வாங்குவதில் ஊழல் நடந்தால் தண்டிக்க வகைசெய்யும் பிரிவுகளை ஊழல் தடுப்பு பிரிவுகளில் சேர்த்திருந்தது.
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
12-பிப்-201919:10:52 IST Report Abuse
Sheri மான்புமிகு ராபெர்ட் வாத்ரா காந்தி அவர்கள் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மை கோர்ட் தீர்ப்பு மூலமாக ஒரு நாள் வெளிவரும். வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
13-பிப்-201900:00:23 IST Report Abuse
VIJAIAN CYaarupa thambi nee?????,Enna oru arivu!!!!...
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:54:18 IST Report Abuse
meenakshisundaramஇதிலே 'மாண்புமிகு" எங்கேயிருந்து வந்தது ?ஏதேனும் திராவிட கட்சியே சேர்ந்து அமைச்சர் ஆகிவிட்டாரா வாதரா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X