சென்னை: உடுமலை அருகே முகாமிட்டு உள்ள சின்னதம்பி காட்டு யானையை வனத்திற்குள் அனுப்புவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது. சின்ன தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறியது.
சின்னத்தம்பி யானையை முகாமிற்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.
Advertisement