முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி: கோர்ட் அவமதிப்பு வழக்கில், முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


மன்னிப்பு கோரினார்

பீஹாரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நடந்துள்ள பாலியல் வன்முறை தொடர்பாக விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரி, ஏ.கே. சர்மாவை, இடமாற்றம் செய்ததற்கு, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த, அப்போது இடைக்கால இயக்குனராக இருந்த, நாகேஸ்வர ராவ், 'இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கனவிலும் நினைத்ததில்லை. நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்கிறேன்' என, கூறியுள்ளார்.








ஆஜர்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேஸ்வர ராவ் கோர்ட்டில் ஆஜரானார்.சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிட்டதாவது:பல தவறுகள் நடந்துள்ளது. இதற்காக சிபிஐ சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். வேண்டுமென்றே தவறு நடக்கவில்லை. நாகேஸ்வர ராவுக்கு32 வருட அனுபவம் உள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.






ஏற்க மறுப்பு


இதன் பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் அவமதிப்பு நடந்துள்ளது. இது அவரது பணியில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும். கோர்ட் அவமதிப்பு செய்த காரணத்திற்காக நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் முழுவதும், அவர் கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
16-பிப்-201906:33:27 IST Report Abuse
Vetri Vel மோசடி செய்ய சொன்னார்... னு சொல்லிட வேண்டியது தானே... திருவாளர் கைத்தடி அவர்களே..
Rate this:
Share this comment
Cancel
Arasu - Madurai,இந்தியா
12-பிப்-201923:11:26 IST Report Abuse
Arasu மோடியின் வலதுகை , RSS ன் இடதுகை
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
12-பிப்-201921:16:23 IST Report Abuse
M S RAGHUNATHAN It is okay. What punishment did the S C has meted out to Prashant Bhushan, a senior advocate for contempt of S C itself. Why feather type touch ? Is it because that he is an advocate and belongs to the same legal fraternity. Or because he is son former Senior counsel in S C and was a former law minister. The actions of S C are inexplicable. Whether the S C has taken any disciplinary action against judges for giving erroneous judgements ? First let the judiciary clean itself of dead wood.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X