கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?| Dinamalar

கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (74)
Advertisement

கோட்டயம்: கேரள மாநிலம் தேவிகுளம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் விதிமீறலை தட்டிக் கேட்டு, அவரிடம் திட்டும் வாங்கியதால், தேவிகுளம் சப்கலெக்டர் ரேணு ராஜ், மாநிலம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.





ஐ.ஏ.எஸ்.,ஸில் 2வது இடம்


கேரள போக்குவரத்தில் பணியாற்றியவர் ராஜகுமாரன் நாயர். அவரது மனைவி லதா. இவர்களின் மகள் தான் ரேணு. கோட்டயம் மருத்துவ கல்லுாரியில் டாக்டர் பட்டம் பெற்றார். இருந்தாலும் அவரது கனவு அதுவல்ல. ஐ.ஏ.எஸ்., படித்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அவரது ஆசை.
இதனாலேயே டாக்டராக இருந்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2015ம் ஆண்டு நாட்டில் 2வது ரேங்கில் வெற்றி பெற்றார் ரேணு. கேரளாவிலேயே அவருக்கு பணியும் கிடைத்தது. தற்போது தேவிகுளம் சப்கலெக்டராக பணியாற்றுகிறார்.

இப்பகுதியில் தான் பிரபல சுற்றுலா தலமான மூணாறும் இருக்கிறது. மற்ற ஊர்களைப் போல இங்கும் அரசியல்வாதிகளின் ஆசியுடன் கட்டடம் கட்டுவதில் ஏகப்பட்ட விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகள். ஐகோர்ட் உத்தரவுப்படி அவை மீது கடும் நடவடிக்கை எடுத்தார் ரேணு. அப்படி, விதிகளை மீறி கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை இழுத்து மூடுவதற்கு வருவாய் அதிகாரிகளுடன் ரேணு சென்றபோது, அங்கு வந்தார் அந்த ஊர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜேந்திரன். ரேணுவுடன் கடும் வாக்குவாதம் செய்ததோ, மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தார். இதற்கெல்லாம் மசியாத ரேணு, தன் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. இதற்கிடையில் ராஜேந்திரனின் அநாகரீக நடவடிக்கை, மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.





ஐகோர்ட் ஆதரவு



தனது நடவடிக்கை பற்றி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார் ரேணு. அவருக்கு சபாஷ் போட்டது ஐகோர்ட். இன்னொரு புறம், ராஜேந்திரனுக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த உஷ்ணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன், ரேணுவுக்கு ஆதரவாக பேசி, ராஜேந்திரனை கண்டித்தார். வேறு வழியில்லாமல் ராஜேந்திரன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

ரேணு கூறும்போது, ‛‛சமுதாயத்தை ஒரே நாளில் மாற்ற வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும். ஏதாவது சட்ட மீறல் என்று யாராவது என்னிடம் வந்தால், மீண்டும் அவர்கள் வந்து கேட்பதற்குள் பிரச்னையை தீர்த்து விடுவேன்'' என்கிறார்.
‛‛ரேணு வெறும் டாக்டராக மட்டும் ஆகி இருந்தால் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்திருப்பார். இப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகி விட்டதால், லட்சக்கணக்கான மக்களுக்கு அவரால் உதவி செய்ய முடிகிறது'' என்று பெருமிதப்படுகிறார் அவரது தந்தை ராஜசேகரன்.


பரத நாட்டியம்


ரேணு ஒரு பரத நாட்டிய கலைஞரும் கூட. இவரது குரு தமிழகத்தை சேர்ந்த பத்மா சுப்பிரமணியம். ‛‛உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பததற்கும் டென்ஷனை குறைப்பதற்கும் பரத நாட்டியம் எனக்கு உதவுகிறது'' என்கிறார் ரேணு. இன்றைய தேதிக்கு கேரளாவின் ஹீரோயின் ரேணு தான்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
18-பிப்-201908:18:48 IST Report Abuse
ராஜேஷ் கோர்ட் உத்தரவுன்னு சபரிமலைலே பொம்பளைங்களே ஏற்றமுயலும் உண்டியல் குரூப் . பொறம்போக்கை ஆக்கிரமைத்த கம்யூனிஸ்ட்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உண்டியல் உடைந்துவிடும் என்ற பயமா ?
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
17-பிப்-201909:12:41 IST Report Abuse
Ram ஆனா அந்த நாஸ்தி ராஜேந்திரனை கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள்
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
16-பிப்-201919:24:59 IST Report Abuse
krishnamurthy மிகச்சிறந்த பெண் அதிகாரி. எல்லோரும் இவரை பின் பற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X