அகிலேஷூக்கு ஆதரவாக போராட்டம்- தடியடி

Updated : பிப் 13, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி: உ .பி., முன்னாள் முதல்வர் அகிலேஷூக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரயாக்ராஜ் பல்கலை., மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் சென்றார். ஆனால் அரசியல்வாதியை அனுமதிக்க முடியாது என பல்கலை., நிர்வாகம் தடை போட்டது.


மம்தா, கெஜ்ரிவால் ஆதரவு







இதன்காரணமாக, உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: உ .பி., அரசின் போக்கை நான் கண்டிக்கிறேன். இது குறித்து அகிலேஷிடம் பேசினேன். இது பா.ஜ., அரசின் சர்வாதிகார போக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு.





மம்தா கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் முதல்வரை தடுத்திருப்பது சரியல்ல. நாட்டில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.








சட்டம் ஒழுங்கை பாதுகாக்க


உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: பல்கலை.,யில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


போலீசார் தடியடி

இதற்கிடையில் அகிலேஷூக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரயாக்ராஜ் பகுதியில் சமாஜ்வாதி தொண்டர்கள் சாலைமறியல், ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201923:18:45 IST Report Abuse
நக்கல் என்னவொரு ரெட்டை வேடம்.. இவர்களை ஆதரிக்கிற அடிமைகளை தூக்கிப்போட்டு மிதிக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201922:02:22 IST Report Abuse
Pugazh V அதாவது யோகி = மம்தா. எங்கள் கட்சி தலைவரை நீங்கள் தடுக்க, அதேமாதிரி உங்கள் கூட்டணி யில் உள்ள தலைவரை நாங்கள் தடுக்க தோ நாம் பராபர் , தானிக்கு தீனி சரி போயிந்தி.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
12-பிப்-201921:59:20 IST Report Abuse
தமிழ்மைந்தன் அகிலேஷ்க்கு ஆதரவாக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் உண்டா?..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X