பொது செய்தி

இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சபரிமலை,ஐயப்பன் கோவில்,நடை திறப்பு

சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(பிப்.,12) மாலை திறக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சபரிமலையில் அசாதாரண நிலை நிலவுகிறது. மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சபரிமலையில் பழைய நிலையே தொடர்கிறது. பெண்கள் வந்தால் தடுக்க பக்தர்களும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீசாரும் தயாராக உள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


5 நாட்கள்:

இன்று காலை 10:00 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுப்பப்பட்டனர். நடை திறந்தபின் வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.




நாளை(பிப்.,13) அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 5:15 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும்.


கள்ளப்பயணம்:

இந்நிலையில் சபரிமலைக்கு கள்ளப்பயணம் மேற்கொண்டு, பின்படிக்கட்டு வழியாக போலீசார் துணையுடன் சாமி தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும், மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாக விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல இளம்பெண்கள் சபரிமலை வரக்கூடும் என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சன்னிதானம், நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்புக்காக, 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201921:58:19 IST Report Abuse
Pugazh V கம்யூனிஸ்ட் களை திட்டி எழுதப் போகிறவர்கள் ஒரே ஒரு நிமிடம், "நீங்கள் கேரள போலீஸ் துறை அமைச்சராக இருந்தால், என்ன செய்வீர்கள்" என்று யோசித்து விட்டு எழுதவும். 1. சுப்ரீம் கோர்ட் பெண்களை அனுமதிக்க சொல்லி விட்டது. 2. அதனால் பெண்கள் வருகின்றனர்.3. தீர்ப்பை ஆதரிக்கும் பாஜக, பெண்களை தடுக்க பந்தல் போட்டு போராட்டம் பண்ணுகிறது.4. இப்போது எழுதுங்கள். நன்றி
Rate this:
Share this comment
sidharthan - chennai,இந்தியா
13-பிப்-201911:12:21 IST Report Abuse
sidharthanMr. Pugazh, எண்ணற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நடைமுறைபடுத்த படாத சூழ்நிலையில், பெண்ணின் இலக்கணத்திற்கு சற்றும் பொருந்தாத சில கேவலமான ஜென்மங்களை பதினெட்டாம்படி ஏற்றிட திரு பினராய் விஜயன் செய்யும் முயற்சியை தான் ஹிந்துக்கள் எதிர்க்கிறார்கள். நீங்கள் நுனிப்புல் மேயாமல் பிரச்னையின் ஆழத்தை புரிந்துகொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201921:51:09 IST Report Abuse
Pugazh V தீர்ப்பு வந்த அன்றே சொன்னேன் : இது அயோத்தி 2.0 என்று. ஒவ்வொரு மாதமும் 14 முதல் 21 வரை இதே கலாட்டா தான் வட மாநில இந்தியர்கள் சிரித்து சந்தோஷப்படுகிறார்கள். தமிழர்கள் அரசியல் பண்ணி, கம்யூனிஸ்ட் களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். விபரீத தீர்ப்பை வழங்கிய கோர்ட் முன்னாலயோ அல்லது அந்த நீதிபதிகளின் ஆபீஸ் முன்னாலோ கூட்டம் போட்டு கோஷம் போட யாரும் இல்லை. அப்படி எதாவது ப்ளான் பண்ணினாலே வட இந்தியர்கள் தூக்கிருவாங்களே. கள்ளப்பயணம் (கள்ளக்காதல் மாதிரி ஒலிக்கிறது) என்ற பதமே இந்துவிரோத வார்த்தை. கோவிலுக்கு செல்வது கள்ளப்பயணமா? கோவிலுக்கு சென்ற பெண்ணை புருஷனும் மாமியாரும் அடித்து துரத்த, பிற இந்து பக்தர்கள் பாராட்டினார்கள். கோர்ட் அந்த புருஷனையும் மாமியாரையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அடுத்த தீர்ப்பை வழங்கியது. முன்பு பாராட்டிய யாரும் அந்த புருஷனையும் மாமியாரையும் காப்பாற்றவோ அவர்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகவோ இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X