பொது செய்தி

இந்தியா

முடிவெட்ட ரூ.20; வெகுமதி ரூ.28 ஆயிரம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement

ஆமதாபாத் : ஹேர்கட் செய்துகொள்வதற்கு ரூ. 20 தான் கட்டணம் என்றபோதிலும், அத்தொழிலாளியின் புதிய அணுகுமுறை, அதனை வீடியோ எடுக்க அனுமதி உள்ளிட்ட காரணங்களால், அத்தொழிலாளிக்கு ரூ. 28 ஆயிரம் வெகுமதியாக அளித்த நிகழ்வு, சமூகவலைதளங்களிலும், யூடியூபிலும் டிரென்டாகி வருகிறது.

நார்வே நாட்டை சேர்ந்தவர் ஹரால்ட் பால்ட். சுற்றுலாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இந்தியா வந்துள்ள பால்ட், தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்துள்ளார்.

பால்டை கவர்ந்த சாலையோர சலூன் :

ஆமதாபாத்தின் பல்வேறு பகுதிகளை பார்த்த பால்ட்டிற்கு, சாலையோர சலூன் கவனத்தை ஈர்த்தது. அங்கு சென்ற அவர், ஹேர்கட் செய்துகொள்ள விரும்பினார். கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ. 20 என அந்த தொழிலாளி பதிலளித்துள்ளார். அதற்கு ஒத்துக்கொண்ட பால்ட், அத்தொழிலாளியுடன் பேசிக்கொண்டே முடி திருத்தமும் செய்துகொண்டுள்ளார். அத்தொழிலாளியின் அணுகுமுறை, அவர் முடிதிருத்தும் விதம் உள்ளிட்டவைகளால் கவரப்பட்ட பால்ட், ஹேர்கட் செய்துகொள்வதை, வீடியோவாக எடுத்துக்கொள்ளவா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதிக்கவே, அதை வீடியோ எடுத்துள்ளார்.


வெகுமதி ; தொழிலாளி மகிழ்ச்சி :

பின்னர், பால்ட், அத்தொழிலாளிக்கு 400 அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரம் ) வழங்கியுள்ளார். இதோடு மட்டுமல்லாது, அத்தொழிலாளியுடன், பால்ட் பல்வேறு கோணங்களில் செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.

இந்த போட்டோ மற்றும் யூடியூபில் வீடியோவை பார்த்த பால்ட்டின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
13-பிப்-201917:34:19 IST Report Abuse
Mano நக்கீரன் பரம்பரையில் உள்ளவன் இருக்கும்வரை இது போன்ற உதவும் நண்பர்களை கொச்சைபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-201923:14:47 IST Report Abuse
நக்கல் இங்க ஒரு சிலர் இருக்கான், ஆள பார்த்து ஏமாத்துவான்... மயிலை கபாலி கோவில் வாசலில் போனால் தெரியும் எப்படி வெளிநாட்டவனை ஏமாற்றுகிறார்கள் என்று... கிட்டபோய் பார்த்தா திராவிட கண்மணிகளா இருக்கும்..
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-பிப்-201913:01:39 IST Report Abuse
Pasupathi Subbianதமிழக கோவில்களில் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும், ஒன்று தி மு க கட்சியினரே அல்லது மாற்று மதத்தவரோ வியாபாரம் செய்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-பிப்-201922:50:23 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இந்த வீடியோவை யூடியூபில் போட்டு அதை பத்து லட்சம் பேர் பார்த்தால், இவருக்கு 500 டாலர்கள் கிடைக்கும். வெளிநாட்டில் யூடியூபில் வீடியோ போடுவது பெரிய வர்த்தகம். இதில் நல்ல எண்ணம் என்றாலும், அதில் லாபம் இல்லாமல் இல்லை.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-பிப்-201905:20:02 IST Report Abuse
Sanny @கிருஷ்ணன், உன்னை என்னவென்று சொல்ல, வார்த்தை வரவில்லை, அவனாவது 28 ஆயிரம் கொடுத்துட்டுப்போனான் பிறகு அதை எப்படியோ சம்பாதிக்கட்டும், அதை இன்னொருவனுக்கு கொடுக்கட்டும், அதுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும். ஆனால் நீ இருக்கிறியே, ஒரு உடல் ஊனமுற்றவனுக்கு உன்னால ஒருவேளை தினம் சாப்பாடு கொடுத்து அதை வீடியோ எடுத்து பணம் சம்பாதிக்க மனசு இருக்கா? நல்லதை பாராட்டுங்க, ஒரு சவரத்தொழிலாளிக்கு 28 ஆயிரம் கிடைத்துக்காக ஏங்காதீங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X