முடிந்தவரை மோதி பார்க்க முடிவு: தம்பிதுரை ஆவேசத்தின் பின்னணி இது தான் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முடிந்தவரை மோதி பார்க்க முடிவு
தம்பிதுரை ஆவேசத்தின் பின்னணி இது தான்

கூட்டணி பேச்சு இறுதி வடிவம் பெறவுள்ள நிலையில், பா.ஜ., வை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை, அ.தி.மு.க., மூத்த தலைவர் தம்பிதுரை, தொடர்ந்து முன்வைப்பதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

A.D.M.K,Thambidurai,அ.தி.மு.க,தம்பிதுரை


லோக்சபா துணை சபாநாயகரும், அ.தி.மு.க., மூத்த தலைவருமான, தம்பிதுரை, பா.ஜ., மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருவதன் பின்னணி குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அமைச்சரவையில் தன்னை சேர்க்காமல், துணை சபாநாயகர் பதவியை வழங்கியதில் இருந்தே, பா.ஜ., மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார், தம்பிதுரை. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், பா.ஜ.,வை விமர்சிக்க, அவர் தவறவில்லை.

ஜெயலலிதா இறப்புக்கு பின், சசிகலாவின் தீவிர விசுவாசியாகி, அவர் சிறைக்குப்போனதும், முதல்வர் அணிக்கு தாவினார். அணிகள் இணைந்த பின், 'டில்லி விவகாரங்களில், எல்லாம் நாம்தான்' என, நம்பியவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தம்பிதுரையால், டில்லி அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்தப் பட்ட, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, மூத்த அமைச்சர்கள் இருவர், ஒடிசா மாநில அதிகார வட்டாரத்துடன் கூட்டணி சேர்ந்து, தாங்களாகவே, டில்லி அரசியலை கையாளத் துவங்கினர். பா.ஜ.,வுக்கும், தம்பிதுரை இல்லாது, வசதியாகிப்போனது.

அவமானம்:


இதற்கிடையில், காவிரி உட்பட பல விவகாரங்களுக்காக, தன் தலைமையில், எம்.பி.,க்கள் குழு சந்திக்க, பிரதமரிடம் நேரம் கேட்டார்,

தம்பிதுரை. அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை; இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார். சொந்த கட்சியும், பா.ஜ.,வும், ஒரேநேரத்தில் தன்னை ஓரங்கட்டுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கே தெரியாமல், தமிழகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள், அடிக்கடி டில்லி வந்து, பா.ஜ., தலைமையுடன் பேச்சு நடத்தியதை, அவரால் பொறுக்க முடியவில்லை.

இந்நிலையில்தான், லோக்சபா கூட்டணிக்காக, பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் நெருங்கவும், தம்பிதுரைக்கு வியர்க்க துவங்கியது. 'நட்பாக இருப்போம்; கூட்டணி வேண்டாம் என்ற, ஜெயலலிதா பாணியை, பா.ஜ.,வுடன் கடைப்பிடிப்போம்' என, தம்பிதுரை, கட்சியினரிடம் வலியுறுத்தினார். ஆனாலும், நிர்ப்பந்தங்கள், நெருக்கடி காரணமாக, நிலைமை கைமீறிச் சென்றது. இதையடுத்து, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து, ஒட்டுமொத்த கவனத்தையும், தன் மீது திருப்ப முயற்சித்தார்.

அதற்கும் பலனில்லை என தெரிந்ததும், தன் விமர்சனத்தை புயல் வேகத்தில் கிளப்ப துவங்கினார். பா.ஜ.,வுடனான கூட்டணியை விரும்பாத, அ.தி.மு.க.,வின் ஒரு பகுதியினர், இதை ரசித்ததால், வார்த்தைகளை கூர் தீட்டினார். கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வின் நெருக்கடியை பகிரங்கமாக கூற முடியாத முக்கிய தலைவர்கள், எம்.பி.,க்கள் பலரும், தம்பிதுரையிடம் தனிப்பட்ட முறையில், 'எங்களால் முடியவில்லை. நீங்களாவது பேசுங்கள்' என்றதும் உற்சாகமானார்.

பா.ஜ.,வுடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பது, தம்பிதுரைக்கு தெரியும்; இருந்தும், விமர்சிக்கிறார் என்றால், காரணங்கள் உள்ளன. வயதில் மூத்தவரான அவருக்கு, வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன.

கரூரில் போட்டி:


மே மாதத்துடன், எம்.பி., பதவிக்காலம் முடியும் நிலையில், அடுத்து ராஜ்ய சபா, 'சீட்' கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

Advertisement

தருவதாக கட்சித் தலைமையே வாக்குறுதி அளித்தாலும், அதை அவர் நம்பத் தயாரில்லை. ஆட்சிக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டால், ஜூலையில், ராஜ்யசபா தேர்தலே நடக்காமல் போகலாம் என்பதே இதற்கு காரணம். எனவே, லோக்சபா தேர்தலை முக்கியமாக பார்க்கிறார். மீண்டும், கரூரில்தான் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

அங்கு, பா.ஜ.,வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்பதால், அக்கட்சி மீது, தான் வைக்கும் விமர்சனங்களால், தனக்கு எவ்விதத்திலும் பாதிப்பு வராது என, நம்புகிறார். தன்னை ஒதுக்குபவர்களோடு, முடிந்தவரை மோதிப் பார்ப்பது என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

இருக்கை இல்லை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திறப்பு விழாவுக்காக, நேற்று, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் போடப்பட்டிருந்த மேடையில், விதிமுறைப்படி, துணை சபாநாயகர் என்ற வகையில், தம்பிதுரைக்கும் இருக்கை போட்டிருக்கலாம். ஆனால், அது தவிர்க்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், முன்வரிசை தலைவர்கள் பலரிடமும் பேசியபடியே வந்த பிரதமர், தம்பிதுரையின் அருகில் இருந்தவரிடம் பேசிவிட்டு, அப்படியே நகர்ந்துவிட்டார். மற்றொரு முறை வந்தபோதும், ஏதோ பேச முயன்ற தம்பிதுரையை, பிரதமர், தவிர்த்து நகர்ந்தது, அப்பட்டமாக தெரிந்தது. நேற்று முன்தினம் தான், பட்ஜெட்டில் மத்திய அரசை, தம்பிதுரை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத் தக்கது.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-பிப்-201904:13:04 IST Report Abuse

J.V. Iyerதவளையும் தன்வாயால் கெடும். தம்பித்துரை தன்வாயால் கெட்டுவிட்டார். அடுத்தது என்ன அவருக்கு தீமுக்க்காவா.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-பிப்-201910:46:46 IST Report Abuse

raghavanகேட்டு வாங்கினால் அது மரியாதை இல்லை, அதுவா தேடி வரணும். அப்படி நடந்துகொள்ளாதது யார் குற்றம்?

Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
17-பிப்-201919:38:53 IST Report Abuse

SENTHILதம்பி ஊருக்கு பழசு...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X