பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.2000,இனாம்,நிச்சயம்,அரசு,முடிவு

சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு இனாமாக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்தத் தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நேற்று உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:


தி.மு.க. - பொன்முடி: 'தேர்தல் கண்ணோட்டம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று பாராட்டி ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் படித்து காட்டினார். நடுநிலை நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில் 'பாழ்' என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

'ஓட்டு வங்கியை உயர்த்துவதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையை அறிவித்துள்ளனர்' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'இது நிழல் பட்ஜெட்' என்றார். அப்போது அதற்கு அர்த்தம் புரியவில்லை. தற்போது தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை முதல்வர் அறிவித்த பின் தான் நிழல் பட்ஜெட்டிற்கு அர்த்தம் புரிகிறது.துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நாங்கள் 2011 முதல் நிஜ பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்து வருகிறோம். மக்கள் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளோம். அதனால் தான் நாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறோம். நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கிறீர்கள்.

முதல்வர்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அறிவித்தது சரியா, இல்லையா என்று மட்டுமே பொன்முடி கூற வேண்டும். ஏழை தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும். பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இதையெல்லாம் ஆராய்ந்து தான் 2000 ரூபாய் உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.

தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். இதில் அந்த கட்சி இந்த கட்சி என்று பார்க்கவில்லை.

பொன்முடி: இரண்டு நாட்களுக்கு முன் நிஜ பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே; உங்களுக்குள் இருக்கும் பிரச்னை பற்றி எனக்கு தெரியாது.

துணை முதல்வர்: சட்டசபையில் 110 விதியின் கீழ் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.

பொன்முடி: நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு சாதாரண ரகம் 50 ரூபாய் சன்ன ரகம் 70 ரூபாய் மட்டுமே

ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குவிண்டாலுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரும்புக்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யவில்லை.

மின்துறை அமைச்சர் தங்கமணி: கடுமையான வறட்சியால் தான் ஏழை தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.

பொன்முடி: ஏழை தொழிலாளர்களுக்கு கொடுப்பதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஏன் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவில்லை என்று தான் கேட்கிறோம்.

தி.மு.க. - ஆஸ்டின்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள 2000 ரூபாயை இந்த நிதியாண்டில் வழங்கி இருக்கலாம். அதை விடுத்து 2018 - 19ம் ஆண்டு துணை நிதி நிலை அறிக்கையில் சேர்த்தது ஏன்; அந்தத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

முதல்வர்: இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும்.

ஆஸ்டின்: நீங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் மட்டுமல்ல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் உங்கள் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில் மக்கள் கொதி நிலையில் உள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiruna - madurai,இந்தியா
13-பிப்-201918:37:13 IST Report Abuse

Thirunaமாதம் ஒருமுறை 2000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பொதுமக்களின் எல்லா தேவைகளும் நிறைவேற போவதில்லை. வயதானவர்களுக்கு கிடைக்க வேண்டிய 1000 ரூபாய் பணத்தை முதலில் ஆதரவு இல்லாத அவர்களுக்கு ஒழுங்காக கொடுங்கள் . எங்களுக்கு உழைத்து சாப்பிடுவதற்கு உடலிலும் மனதிலும் தைரியம் இருக்கு.

Rate this:
13-பிப்-201919:00:06 IST Report Abuse

SOUNDARஆயிரம் ரூபாய் எங்கே முழுமையாக கிடைக்கிறது. அதிலும் கமிஷன் பார்க்கிறார்கள். எவ்வளவு தான் பணத்தை அள்ளி வீசினாலும் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ...

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
13-பிப்-201918:09:42 IST Report Abuse

Mirthika Sathiamoorthi60 லட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வாக்குக்கு பணமா? ( விவசாய குடும்பத்துக்கு 6000 ரூபாய் அது என்னவாம்? விவசாய கடன் தள்ளுபடி அதுக்கு பேர் என்னவாம்? ) மொத்தம் 1200 கோடி...அடுத்த நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் செலவினங்கள் ரூ.2,12,035 கோடி....1 % மட்டுமே அரசு வருவாயில் இருந்து இந்த நிதி.. ( அரசின் மொத்த வருவாயில், ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக ரூ.85,026 கோடி செலவிடப்படும் நிலை) இந்த ஒரு சதவீதத்தில் மொத்த தமிழ்நாடே நாசமாயிடுச்சு அப்புடிதானே? இலவசம்ண்ணா எல்லாமே வேணும்ன்னு சொல்லணும்...நம்ம கண்ணுக்கு தெரியாத ( கண்ணா மூடிக்கிட்டு இருக்கிற ) மானியங்கள், கார்ப்ரேட்டிருக்கு கொடுக்கும் வரி விலக்குகள் அவங்களுக்கு கொடுக்கிற மின்சாரம் இலவசம், தண்ணி இலவசம், இடம் இலவசம்,... கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி வரி விலக்கு கார்பரேட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கு....உடனே சொல்லலாம் இதெல்லாம் தொழில் தொடங்கி வேலைவாய்ப்பிற்கு ( ஸ்டர்லைட்டுக்கு அப்புறம் எவனாவது இங்கே வருவானா? )....எத்தனை வேலைவாய்ப்பை உருவாகியிருக்கோம்? வேலையின்மை 6 .1 % கடந்த 40 வருடங்களில் யில்லாத அளவு..நம்ம சமூக அமைப்பில் உள்ள பிரச்சனையே இன்னொருத்தனுக்கு கிடைக்காரப்ப வரும் எரிச்சல்...அதன் வெளிப்பாடுதான் இலவசத்தின் மீது கோவம்...உடனே நாம் சொல்லுவோம் இலவச கல்வி கொடுங்கன்னு...ஏன் காசு கொடுக்கறீங்கன்னு... எல்லா அரசு பள்ளியும் இலவசம் தானே...உடனே சொல்லுவோம் அரசு பள்ளியில் தரம் இல்லை....இவங்களைப்பாத்து கேள்வி... பொறியல் கல்லூரியில் தனியாரிடம் சேர விருப்பமா அரசாங்க கல்லூரியில் சேர விருப்பமா...?அரசு தரமான கல்வி தர்லைன்னா ஏன் அண்ணா யூனிவெர்சிட்டியும், IIT க்கும் அடிச்சுகிறோம்? பிரைவட்டுக்கு போக வேண்டியது தானே? ஏன் நிறைய தனியார் கல்லூரியில் சீட்டை நிரம்ப மாட்டிங்குது..? இங்க மட்டும் அரசு தரமான கல்வி கொடுக்குது அப்புடிதானே? பணம் குறைவு...அதை விட முக்கிய காரணம் தரம்.. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில படுச்சிட்டு போறப்ப அதன் மரியாதையே வேற...இதை மருத்துவர் வட்டத்தில் கேட்டால் தெரியும்...இன்னொரு கொடுமையான விஷயம் இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் இரவு உணவே இல்லாமல் படுக்கிறாங்க.. ஆனா தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை குறைவு காரணம் இலவச அரிசி...இலவச அரசியை நிறுத்திட்டு பட்டினிச்சாவுக்கு வட மாநிலம் போல் இங்கும் வரணுமா? வேலை கொடுங்கன்னு அரிசியை நாங்களே வாங்கிக்கறோம்ன்னு சொல்ல்றவங்க யாரும் பசியின்னா என்னன்னே தெரியாதவங்க...கோதுமை, நெல் ஆகியவற்றின் கையிருப்பு அளவு 24.4 மில்லியன் மெட்ரிக் டன்தான் நமக்குத் தேவை. ஆனால் இன்றைய நிலையில், அரசின் உணவு தானியக் கிடங்குகளில் 45.4 மில்லியன் மெட்ரிக் டன் கையிருப்பு அரசிடம் இருக்கிறது. அதிகமா இருக்கிறதை என்ன பண்ணலாம்? எலி கரையானுக்கு கொடுத்துடிலாமா? தமிழகத்தி மட்டும்தான் முறையான கட்டமைப்பு இருக்கு அரிசியை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்ல...வெறும் 2000 ரூபாய் கொடுக்கறதுக்கு இப்படி குதிக்குறோமே... நமக்கு கொடுக்காத காசு அதுக்கு என்ன பண்ணப்போறோம்? மத்திய ஜி.எஸ்.டி. (ரூ.5,454 கோடி), அனைவருக்கும் கல்வித் திட்டம் (ரூ.2,109 கோடி), தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் (ரூ.1,092 கோடி), உள்ளாட்சிகளுக்கான ஒதுக்கீடு (ரூ.3,852 கோடி), ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை (ரூ.455 கோடி) என்று மத்திய அரசு தர வேண்டிய தொகை நம்ம மாநிலத்துக்கு தரப்படாமல் இழுத்தடிக்கிறது...அதுமட்டுமா? உதய் மின்திட்டத்தில் தமிழக அரசின் மின் கடனை தீர்க்கும் எனும் வாக்குறுதியில் அந்த திட்டத்தில் இணைத்து...இன்று வரை அந்த கடன் 22000 கோடி தீர்க்கப்படவே இல்லை...அதுக்கு இப்போ வரைக்கும் 2000 கோடி தமிழக அரசு வட்டி கட்டியிருக்கு...இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது ஆனா எவனோ ஒரு 2000 ரூபாய் வாங்கின்னா நமக்கு பத்திகிட்டு வந்திடும்...

Rate this:
Preabhu - Tiruppur,இந்தியா
13-பிப்-201917:49:57 IST Report Abuse

Preabhu2000 ரூபாய் தருவதற்கு பதிலாக பேருந்து கட்டணத்தை குறைத்தால் . மக்கள் பயன் அடைவார்கள்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X